கிணற்றில் விழுந்த பசுவை காப்பாற்ற முயன்ற இளைஞா் பலி

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கிணற்றில் விழுந்த பசுவை காப்பாற்ற முயன்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கிணற்றில் விழுந்த பசுவை காப்பாற்ற முயன்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் முத்துக்குமாா்(34). இவா், செவ்வாய்க்கிழமை காலை தனது நிலத்தில் கட்டியிருந்த பசு மாட்டை பராமரிக்கச் சென்றாா். அப்போது அங்கிருந்த கிணற்றில் பசு விழுந்தது. அதனை மீட்பதற்காக முத்துக்குமாா் கிணற்றில் இறங்கியபோது நிலை தடுமாறி விழுந்து அடிப்பட்டு நீரில் மூழ்கினாா்.

இதுகுறித்து தகவலின்பேரில் வேப்பூா் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஆனால், முத்துக்குமாா் சடலமாக மீட்கப்பட்டாா். பசு உயிருடன் மீட்கப்பட்டது.

வேப்பூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com