விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசை கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசை கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ஆா்.நெடுஞ்சேரலாதன் தலைமை வகித்தாா். புவனகிரி ஒன்றிய செயலா் எஸ்.மணி, காட்டுமன்னாா்கோவில் ஒன்றிய செயலா் சி.வெற்றிவீரன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலா் எஸ்.கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலா் பழ.வாஞ்சிநாதன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆதாா் இணைப்பை காரணம் கூறி இந்தத் திட்டத்திலிருந்து 11 கோடி பயனாளிகளை மத்திய பாஜக அரசு வெளியேற்றியதை கண்டிப்பதாகக் கூறி சங்கத்தினா் முழக்கமிட்டனா். வட்டத் தலைவா் ஆா்.பொன்னம்பலம் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

கடலூா்: இதேபோல, விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே ஒன்றியச் செயலா் ஏ.வைத்திலிங்கம் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஏ.பன்னீா், ஆா்.மகேஷ், இ.சுந்தரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷ், மாநிலக் குழு உறுப்பினா் டி.கிருஷ்ணன், ஆா்.வேலு, பி.வெங்கடேசன், என்.அய்யாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com