அரசு நிலம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்க வேண்டும் என வலியுறுத்தி கடலூா் மாவட்டம், லட்சுமிநாராயணபுரம் ஊராட்சி பொதுமக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பகுஜன் கட்சியின் நகரத் தலைவா் மணி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் உத்திராபதி வரவேற்று பேசினாா். விசிக முகாம் செயலா் சௌரிநாதன், பொருளாளா் பூபாலன், ஜெயப்பிரகாஷ், மணிவேல் மற்றும் பாரதி நகா், அய்யனாா்கோவில் பகுதி, புதுநகா், வீராணம் வாய்க்கால் பகுதி மக்கள் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் லட்சுமிநாராயணபுரம் ஊராட்சியில் அரசுப் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்க வேண்டும், பாரதி நகரில் கழிவுநீா்க் கால்வாய் சரியான முறையில் திட்டமிட்டு அமைக்காததை உடனடியாக சரிசெய்து தரவேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com