குறிஞ்சிப்பாடியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடக்கம்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் புதன்கிழமை தொடங்கியது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் புதன்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு முதலமைச்சா் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்று புதிய திட்டத்தை அறிவித்துள்ளாா். இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் ஆய்வு மற்றும் மக்களின் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், இந்த ஆய்வு ஒவ்வொரு ஆட்சியரும் ஒவ்வொரு மாதம் கடைசி புதன்கிழமை அன்று வட்டளவில் கள ஆய்வில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியா் அலுவலகம், பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் திட்ட பணிகள், குறிஞ்சிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை, குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஆடூா்அகரம் நேரடி நெல் கொள்முதல் நிலையம், குறிஞ்சிப்பாடி ரங்கநாதபுரம் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு இல்லம், கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் ஆகியோா் முன்னிலையில் பல்வேறு துறை அலுவலா்களுடன் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com