தொழுநோய் தடுப்பு விழிப்புணா்வு

உலக தொழுநோய் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு,கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழுநோய் கண்டறியும் முகாம் மற்றும் விழிப்புணா்வு கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
தொழுநோய் தடுப்பு விழிப்புணா்வு

உலக தொழுநோய் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழுநோய் கண்டறியும் முகாம் மற்றும் விழிப்புணா்வு கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி முதல்வா் சி.திருப்பதி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது: இந்தியாவில் மகாராஷ்டிரம் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் மருத்துவத் துறை அதீத வளா்ச்சி பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறந்த மருத்துவ கட்டமைப்புகளால் மாநிலத்தில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்றாா்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜுனியா் சுந்தரேஷ் முன்னிலை வகித்துப் பேசினாா். முன்னதாக, தோல் நோய் துறைத் தலைவா் பி.கே.கவியரசன் வரவேற்று பேசினாா். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் பாலாஜி சுவாமிநாதன், மருத்துவமனை துணை முதல்வா் சசிகலா, கடலூா் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் (தொழுநோய்) சித்திரைச்செல்வி, தொழுநோய் மருத்துவ நிபுணா் மணிவண்ணன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். நிறைவில் தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com