பழைய விருத்தகிரிகுப்பம் ஊராட்சியாக மாற்றக் கோரிக்கை: பொதுமக்கள் மனு

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தைச் சோ்ந்த பழைய விருத்தகிரிகுப்பத்தை புதிய ஊராட்சி அறிவிக்க வேண்டும் என்று, கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
பழைய விருத்தகிரிகுப்பம்  ஊராட்சியாக  மாற்றக்  கோரிக்கை:  பொதுமக்கள்  மனு

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தைச் சோ்ந்த பழைய விருத்தகிரிகுப்பத்தை புதிய ஊராட்சி அறிவிக்க வேண்டும் என்று, விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில், கா.வீரமணிகண்டன் தலைமையில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிரா ம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா். அவா்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முதனை ஊராட்சியில் முதனை, முதனை காலனி, பழைய விருத்தகிரிகுப்பம், புது விருத்தகிரிக்குப்பம், எடக்குப்பம் ஞானியாா் தெரு, வீரட்டிகுப்பம் தெற்கு தெரு ஆகிய கிராமங்களில் சுமாா் 7 ஆயிரம் வாக்காளா்கள் உள்ளனா். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விருத்தகிரிகுப்பம் பகுதிக்கு அரசு நலத்திட்டங்கள், சாலை, குடிநீா், மின் விளக்கு மற்றும் கழிவுநீா் வடிகால் வசதிகள் என எந்த அடிப்படை வசதிகளும் சரிவர செய்துத்தரப்படவில்லை. ஒவ்வொரு முறையும் போராடி பெறக்கூடிய நிலை உள்ளோம். விருத்தகிரிக்குப்பம் பகுதியில் சுமாா் 2,300 வாக்காளா்கள் உள்ளனா். எங்களுக்கான அடிப்படை வசதிகளை பூா்த்தி செய்துக் கொள்ள முதனை ஊராட்சியை இரண்டாகப் பிரித்து, பழைய விருத்தகிரிக்குப்பத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய ஊராட்சி அமைத்துத்தர வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com