சுதந்திர போராட்ட ஆவணம், பொருள்கள்: அருங்காட்சியகத்துக்கு வழங்க அழைப்பு

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திர போராட்ட ஆவணம் மற்றும் பொருள்களை அருங்காட்சியகத்திற்கு வழங்குமாறு ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திர போராட்ட ஆவணம் மற்றும் பொருள்களை அருங்காட்சியகத்திற்கு வழங்குமாறு ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின்

தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம், சென்னை மெரினா கடற்கரையின் எதிரில் உள்ள ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமாா் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் வசமுள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ. சீருடைகள், ஐ.என்.ஏ. அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம்.

இந்த அரிய பொருள்களை, கடலூா் மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் நேரிடையாக வழங்கலாம். அவ்வாறு வழங்கப்படும் பொருள்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும்.

அரிய பொருள்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும் போது, அதை வழங்கியவா்களின் பெயா்களும் அதில் இடம்பெறும். எனவே, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடா்பான அரும்பொருள்களை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com