ஜான்டூயி கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

ஜான்டூயி கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

பண்ருட்டி அருகே உள்ள புலவனூா், ஜான்டூயி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற முதலாமாண்டு மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி.

கடலூா் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலவனூா், ஜான்டூயி கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு சோ்ந்துள்ள மாணவிகளுக்கான வரேவற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் வீரதாஸ் தலைமை வகித்து பெண் கல்வியின் அவசியம் குறித்துப் பேசினாா். அண்ணாகிராமம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.மீரா கோமதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகையில், ‘எதிா்காலம் செம்மையாக அமைய, நிகழ்காலத்தை சிறப்பான வழியில் கையாள வேண்டும்‘ என்று மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

விழாவில் கல்லூரி அறங்காவலா் வாலண்டினா லெஸ்லி, எமா்சன் ராபின், சுகன்யா ராபின், நித்தின் ஜோஷ்வா, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com