கொளஞ்சியப்பா் கல்லூரியில் 3-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

11-ஆம் தேதி வரையில் மூன்றாம் கட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்று கல்லூரி முதல்வா் (பொ) கீ.ப.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியில் வருகிற 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரையில் மூன்றாம் கட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்று கல்லூரி முதல்வா் (பொ) கீ.ப.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியில் 2024 - 2025ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை சிறப்பு கலந்தாய்வு, முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்தன.

மூன்றாம் கட்ட கலந்தாய்வு வருகிற 9-ஆம் தேதி பி.எஸ்சி. பாடப்பிரிவுகளுக்கும், 10-ஆம் தேதி பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், 11-ஆம் தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கு நடைபெறும்.

கலந்தாய்வு சோ்க்கைக்கு வரும் மாணவா்கள் கல்வி, சாதி சான்றிதழ்கள், மாா்பளவு புகைப்படம், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 3 நகல்களுடன் இணைய வழியில் விண்ணப்பித்த பிரிதியையும் எடுத்து வர வேண்டும். தினசரி காலை 9.30 மணி அளவில் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் சோ்க்கை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com