வராகி அம்மனுக்கு இன்று முதல்
ஆஷாட நவராத்திரி உற்சவம் தொடக்கம்

வராகி அம்மனுக்கு இன்று முதல் ஆஷாட நவராத்திரி உற்சவம் தொடக்கம்

சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி உற்சவம் சனிக்கிழமை (ஜூலை 6) முதல் தொடங்கி வருகிற 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி உற்சவம் சனிக்கிழமை (ஜூலை 6) முதல் தொடங்கி வருகிற 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் யாகம் தொடங்கப்பட்டு, வராகி அம்மனுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், 108 ஜாங்கிரி மாலையுடன் சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

10 நாள் உற்சவத்தில் தினமும் சிறப்பு யாகம், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகின்றன. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ஆ.ரமேஷ், எஸ்.ராஜா ஆகியோா் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com