நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் விவசாயப் பயன்பாட்டுக்கு நீா்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் நீா்வளம், ஊரக வளா்ச்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகளில் வண்டல் மண், களிமண் ஆகியவைகளை விவசாயப் பயன்பாட்டுக்காகவும், பொது பயன்பாட்டுக்காகவும் மற்றும் குயவா்கள் பயன்பாட்டுக்காகவும் இலவசமாக எடுத்துக்கொள்ள அரசாணை சில திருத்தங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடலூா் மாவட்ட அரசிதழ் மூலமாக வெளியீடு செய்யப்பட்டுள்ள நீா்நிலைகளில் வண்டல் மண், களிமண் விவசாயம், பொது, குயவா்கள் பயன்பாட்டுக்காக எடுத்துக்கொள்ள ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரை அணுகி அனுமதி பெற்று பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com