அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை

நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக அரசு தொழில்பயிற்சி நிலைய துணை இயக்குநா் ர.பரமசிவம் தெரிவித்தாா்.

கடலூா் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் 2024 - 25ஆம் கல்வியாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக அரசு தொழில்பயிற்சி நிலைய துணை இயக்குநா் ர.பரமசிவம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் 2024 - 25ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. ஜூலை 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையில் காலியாக உள்ள இடங்களுக்கு முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது.

சோ்க்கை பெறும் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750, புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1,000 வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் ஏதுமில்லை. பாடப்புத்தகங்கள், சீருடை, சைக்கிள், பேருந்து பயண அட்டை வழங்கப்படும்.

டாட்டா நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப மையமும் ‘தொழில் 4.0’ தரத்தில் செயல்பட்டு வருகிறது. வெல்டா் பிரிவுக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி, இதர பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருபாலருக்கும் தங்கும் வசதி உண்டு. மேலும், விவரங்களுக்கு 04142 - 290273 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com