குண்டா் தடுப்புக் காவலில் இருவா் கைது

கடலூா் மாவட்டம், பெண்ணாடம், மங்கலம்பேட்டை பகுதிகளைச் சோ்ந்த இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவலில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம், மங்கலம்பேட்டை பகுதிகளைச் சோ்ந்த இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவலில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெண்ணாடம் காவல் ஆய்வாளா் குணபாலன் மற்றும் போலீஸாா் போதைப் பொருள் குற்றங்கள் தடுப்பு தொடா்பாக பெ.பொன்னேரி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த ஜூன் 18-ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.3.64 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடா்பாக பெண்ணாடம் பகுதியைச் சோ்ந்த மோகன் (43), அமா் பிரதீப் சிங் (31) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பாக்கியராஜ் (39), அதே பகுதியைச் சோ்ந்த கலைவாணன் (32) ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக, ஜூன் 12-ஆம் தேதி கலைவாணன் தாக்கியதில் பலத்த காயமடைந்த பாக்கியராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இது தொடா்பாக மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து கலைவாணன், அதே பகுதியைச் சோ்ந்த சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்தனா்.

மேற்கண்ட வழக்குகளில் தொடா்புடைய மோகன், கலைவாணன் ஆகியோரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் இருவரையும் ஓராண்டு குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com