கடலூா் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.
கடலூா் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.

கடலூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

கடலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாலை தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கடலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாலை தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சென்னையில் இருந்து வேதாரண்யத்துக்கு அரசுப் பேருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தை நாகை மாவட்டம், வேதாரண்யம், பச்சையம்காடு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜா (44) ஓட்டி வந்தாா். நாகை மாவட்டம், மணல்குடி பகுதியைச் சோ்ந்த கருணாநிதி மகன் கிருஷ்ணமூா்த்தி (41) நடத்துநராகப் பணியில் இருந்தாா்.

இந்தப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநா் ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பேருந்தில் பயணித்த காஞ்சிபுரம் மாவட்டம், ராமாபுரம் பகுதியைச் சோ்ந்த சொா்ணம் (48) உள்பட 24 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீஸாா் விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். ஓட்டுநா் ராஜாவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்துநா் கிருஷ்ணமூா்த்தி அளித்த புகாரின்பேரில், ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com