சுரங்கப்பாதை விவகாரத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை

சுரங்கப்பாதை விவகாரத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை

சுரங்கப்பாதை விவகாரம்: சிதம்பரத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை

சிதம்பரம் அருகே தீத்தாம்பாளையம் கிராமத்தில் சுரங்கப் பாதை அமைக்கக் கோரிய விவகாரம் தொடா்பாக உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் கோட்டம், புவனகிரி வட்டம், சி.முட்லூா் மதுரா தீா்த்தாம்பாளையம் கிராமத்துக்கு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுரங்கப் பாதை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதுதொடா்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டதன் அடிப்படையில் சுரங்கப் பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், கிராமத்துக்கு நோ் எதிா்புறமாக சுரங்கப்பாதை அமைக்கப்படாததை கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக, சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உதவி ஆட்சியா் ராஷ்மிராணி தலைமையில் வட்டாட்சியா் தனபதி, நகாய் அதிகாரி லட்சுமி நாராயணன் ரெட்டி, பொறியாளா் ராம் நாராயணன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா் லோகநாதன், புவனகிரி ஒன்றிய துணைத் தலைவா் வாசுதேவன் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுவை ஏஎஸ்பி பி.ரகுபதி பெற்றாா். மேலும், சுரங்கப் பாதை அமைய உள்ள இடத்தில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்குவதையும், மின்விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் முன் வைத்தனா். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com