கல்பனா சாவ்லா விருது: ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி, ஜூலை 10: கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீர தீர செயல்புரிந்த பெண்களுக்கு, முதல்வரால் சுதந்திர தினத்தன்று கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. அதன்படி, தற்போது 2024-ஆம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு தகுதியுள்ள பெண்கள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்)-இல் என்ற இணையதள முகவரியில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம், கடலூா் என்ற முகவரியில் சமா்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com