கடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா்.
கடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா்.

விசிகவினா் ஆா்ப்பாட்டம்

நெய்வேலி, ஜூலை 10: கடலூா் மாநகர மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அம்பேத்கா் சிலை அருகே ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். விசிக தலைவா் தொல்.திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தலித் தலைவா்கள், அரசியல் தலைவா்கள் அனைவருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

போராட்டத்துக்கு, கடலூா் மாநகர மாவட்டச் செயலா் செந்தில் தலைமை வகித்தாா். மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் கண்டன உரையாற்றினாா். மாநில அமைப்புச் செயலா் திருமாா்பன் மற்றும் நிா்வாகிகள் ஸ்ரீதா், செங்கதிா், சேதுராமன், கிட்டு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com