உடல், கண்கள் தானம்

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம், சக்கரம் கொத்தங்குடி பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ஏ.செல்வராஜ் (77) புதன்கிழமை காலமானாா். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாகப் பெறப்பட்டது.

கண்கள் பாா்வையற்றவருக்கு பொருத்துவதற்காகவும், உடல் மருத்துவ மாணவா்கள் ஆய்வுக்காகவும் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகத் தலைவா் எல்.ராமச்சந்திரன், உறுப்பினா் சத்தீஷ்குமாா் ஆகியோா் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com