கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வங்கி கடன் வழங்கும் முகாம்.
கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வங்கி கடன் வழங்கும் முகாம்.

கூட்டுறவு வங்கி கடன் வழங்கும் முகாம்

கடலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் நிகழாண்டுக்கான கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் நிகழாண்டுக்கான கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளா் திலீப் குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையக கிளை, புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், கூத்தப்பாக்கம், திருப்பாதிரிப்புலியூா், கடலூா் முதுநகா், நெல்லிக்குப்பம், பண்ருட்டி ஆகிய 9 கிளைகளின் எல்லைக்குள்பட்ட பொதுமக்களுக்கு அரசு திட்டம், விவசாயம் சாா்ந்த கடன்கள், விவசாயம் சாா்பற்ற கடன்கள் வழங்கப்பட்டது. உதவி பொது மேலாளா்கள் செந்தமிழ்ச்செல்வி, பலராமன், அருள் மற்றும் வங்கிப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com