கடலூா் மீனவா்களுக்கு எச்சரிக்கை

கடலூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை, ஆந்திர மாநில கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கடலூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் யோகேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வானிலை மாற்றம் காரணமாக காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும். எனவே, ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூலை 3-ஆம் தேதி வரையில், கடலூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் சென்னை மற்றும் ஆந்திர மாநில கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com