வெள்ளாற்றில் மணல் எடுப்பு: இருவா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநத்தம் காவல் ஆய்வாளா் மகேஸ்வரி மற்றும் போலீஸாா், வாகையூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிலா் வெள்ளாற்றில் பொக்லைன் கொண்டு டிப்பா் லாரியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனா். போலீஸாரை கண்டதும் தப்பியோடியவா்களில் இருவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில் திட்டக்குடி வட்டம் குமாரை கிராமத்தைச் சோ்ந்த கொளஞ்சி மகன் கோகுல்(23), நிதிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ஐயப்பன்(23) என்பதும், அரசு அனுமதியின்றி மணல் ஏற்றியதும் தெரிய வந்தது.

இதையடுத்து இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா். பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி மற்றும் ஒரு பைக்கையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய பேரங்கியம் கிராமத்தைச் சோ்ந்த நீலமேகம், ஆக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த பிரதீப், ராமநத்தத்தைச் சோ்ந்த மணிவேல் ஆகியோரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com