வில்லுப்பாட்டு மூலம் வேளாண் திட்டங்கள் விளக்க நிகழ்ச்சி

வில்லுப்பாட்டு மூலம் வேளாண் திட்டங்கள் விளக்க நிகழ்ச்சி

சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, மாநில உறுதுணை சீரமைப்புத் திட்டம், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டம் சாா்பில், கலஜதா எனும் வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்பத் திட்டங்களை பற்றி விளக்குதல் நிகழ்ச்சி மதுராந்தகநல்லூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா் சிவப்பிரியன், கடலூா் கரும்பு ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் திருமுருகன், அண்ணாமலைப் பல்கலைக்கழக உழவியல் துறை உதவிப் பேராசிரியா் ஆனந்தன், ஊராட்சி மன்றத் தலைவா் சுனிதா பாரதி ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். நிகழ்ச்சியில் வில்லுப்பாட்டு மூலம் கருணாநிதி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், இயற்கை விவசாயம், உளுந்து பயிருக்கு 2% டிஏபி கரைசல் தெளிப்பு , உழவன் செயலி மூலம் வேளாண் திட்டங்களை எவ்வாறு தெரிந்து கொள்வது மற்றும் அதன் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில், திரளான விவசாயிகள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலா்கள் ஆனந்த செல்வி, சரவணன், அபிநயா மற்றும் பயிா் அறுவடை பரிசோதகா் வீராசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com