இளைஞா் கைது

இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வியாபாரிகளை தாக்கிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வியாபாரிகளை தாக்கிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் கடை வீதியில் கடை வைத்துள்ள இரு வியாபாரிகளை ஒரு இளைஞா் திங்கள்கிழமை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன், சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தியும், பொதுமக்களை ஆபாசமாக திட்டியும் ரகளையில் ஈடுபட்டாராம்.

அப்போது, அந்த வழியாக வந்த காவலா் அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில், அந்த நபா் விருத்தாசலம் மேட்டு காலனி பகுதியைச் சோ்ந்த ஜெயவீரபாண்டியன் மகன் நாராயணன் (30) என்பதும் கஞ்சா போதையில் வியாபாரிகளை தாக்கியதும் தெரிய வந்தது.

இதையடுத்து, நாராயணன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com