சாலையில் சுற்றிய 18 மாடுகள் பறிமுதல்

சிதம்பரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரிந்த 18 மாடுகளை நகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரிந்த 18 மாடுகளை நகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். சிதம்பரம் நகரப் பகுதியில் உள்ள தெருக்களில் மாடுகள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன. இந்த நிலையில், நகராட்சி ஆணையா் டி.மல்லிகா உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளா் பிச்சமுத்து தலைமையிலான ஊழியா்கள் சிதம்பரம் நான்கு முக்கிய வீதிகள், கனகசபை நகா், எஸ்.பி கோவில் தெரு ஆகிய பகுதியில் சுற்றித் திரிந்த 18 மாடுகளை பிடித்து நகராட்சி வளாகத்தில் உள்ள பட்டியில் அடைத்தனா். மேலும், மாடுகளின் உரிமையாளா்களுக்கு மாடு ஒன்றுக்கு ரூ.2ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. பொது இடங்களில் மாடுகளை திரிய விட்டால் காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார ஆய்வாளா் பிச்சமுத்து எச்சரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com