தலைமை தபால் நிலையத்தில் உதவி அலுவலா் தற்கொலை

கடலூா், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்தில் உதவி தபால் அலுவலா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

நெய்வேலி: கடலூா், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்தில் உதவி தபால் அலுவலா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். அரியலூா் மாவட்டம், வரதராஜன்பேட்டை, வள்ளகுறிச்சி பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த மகாதேவன் மகன் கண்ணன் (55). இவா், கடந்த ஒராண்டாக கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் உதவி தபால் அலுவலராக பணியாற்றி வந்தாா். இவருக்கு, தனியாா் வங்கியில் கடன் இருந்ததாம். இதனால், கடந்த சில நாள்களாக மன வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கண்ணன் செவ்வாய்க்கிழமை அதிகாலை தலைமை தபால் நிலையத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கண்ணன் மகன் நந்தகுமாா் அளித்த புகாரின் பேரில், புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com