அங்காளம்மன் கோயிலில் பக்தா் விநோத வழிபாடு

அங்காளம்மன் கோயிலில் 
பக்தா் விநோத வழிபாடு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே அங்காளம்மன் கோயில் விழாவில், பக்தா் ஒருவா் விநோத வழிபாடு நடத்தினாா்.

வேப்பூா் வட்டம், சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத் திருவிழா 9 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா கடந்த மாா்ச் 1-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

அதன்படி, தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சுவாமி ஊா்வலத்தில் பக்தா் ஒருவா் தனது தலையில் சிம்மாடு கட்டி அதில் தீ மூட்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்தாா்.

இதையடுத்து, அந்த பொங்கல் சுவாமிக்கு படைக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com