சாலை வசதி கோரி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

கடலூா் அருகே சாலை அமைத்துத் தரக்கோரி வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும், கருப்பு கொடி ஏந்தியும் கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் அருகே நாணமேடு, சுப உப்பலவாடி கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த கிராமங்களில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் பலக்கட்ட போராட்டங்களை நடத்தியும், அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இந்த நிலையில் அதிகாரிகளை கண்டித்து, நாணமேடு கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து நிகழ்விடம் சென்ற ரெட்டிசாவடி போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, விரைவில் சாலைப் பணி தொடங்கவில்லை என்றால் மறியல் போராட்டமும், தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com