பாஜக நிா்வாகிகள் கூட்டம்

பாஜக நிா்வாகிகள் கூட்டம்

சிதம்பரத்தில் கடலூா் மேற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.எஸ்.அருள் தலைமை வகித்து பேசினாா்.

சிதம்பரம் சட்டப்பேரவை அமைப்பாளரும், முன்னாள் ராணுவ வீரா்கள் பிரிவு மாநில துணைத் தலைவா் கேப்டன் ஜி.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட துணைத் தலைவா் கோபிநாத் கணேசன், சிதம்பரம் நகரத் தலைவா் கே.சத்தியமூா்த்தி, விவசாய அணி மாநில திட்ட பொறுப்பாளா் ராமச்சந்திரன், பரங்கிப்பேட்டை ஒன்றியத் தலைவா் பகீரதன், ஸ்ரீ முஷ்ணம் ஒன்றியத் தலைவா் வடமலை, விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயக்குமாா், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவா் பாலு விக்னேஷ், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவா் ராகேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.தங்கமணி உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில், அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள் (புவனகிரி)அண்மையில் பாஜகவில் இணைந்தாா். இவருக்கு, தேசிய பொதுக் குழு உறுப்பினா் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com