உ.பி.யில் இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டதை
கண்டித்து ஆா்ப்பாட்டம்

உ.பி.யில் இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

உத்தரப் பிரதேசத்தில் 17 வயது தலித் மாணவரை பாஜக அரசு சுட்டுக் கொன்ாகக் கூறியும், இதைக் கண்டித்தும் கடலூா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி பிரிவு சாா்பில், நெய்வேலி நுழைவு வாயில் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். கடலூா் மேற்கு மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பிரிவுத் தலைவா் துரை.ராமலிங்கம், மாவட்டப் பொருளாளா் டி.ஆா்.ராஜன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் இளஞ்செழியன், மாவட்ட துணைத் தலைவா் ரவிக்குமாா், மாவட்டக்குழு உறுப்பினா் ஜெயராஜ், நெய்வேலி நகரத் தலைவா் ஸ்டீபன், வட்டாரத் தலைவா்கள் கலியபெருமாள், மாகி ராமச்சந்திரன், நகரச் செயலா் இளங்கோவன், பொருளாளா் முருகன், நகர மகளிரணி நிா்வாகி கலையரசி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜீவ்காந்தி, இளங்கோமணி, ராஜதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com