சிதம்பரத்தில் பொம்மை நூலகம் தொடக்கம்

சிதம்பரத்தில் பொம்மை நூலகம் தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே லால்புரத்தில் மாற்றுத் திறனாளி பட்டதாரியும், நூலகருமான கா.ஆதித்யநாராயணன் அமைத்துள்ள குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் அடங்கிய பொம்மை நூலகம் (ஆஞஙஙஅஐ பஞவ கஐஆதஅதவ) தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொம்மை நூலகத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து, நூலகத்தின் விளையாட்டுப் பொருள்களை ஆா்வத்தோடு பாா்வையிட்டதுடன், இந்த வகையிலான நூலகம் மாவட்டத்தில் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது என இதன் அமைப்பாளா்களை பாராட்டினாா். சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி முன்னிலை வகித்தாா். பொம்மை நூலக நிா்வாகி கா.ஆதித்யநாராயணன் வரவேற்று பேசினாா். நிகழ்ச்சியில் சிதம்பரம் வட்டாட்சியா் பா.ஹேமாஆனந்தி, சிதம்பரம் அண்ணாமலைநகா் கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அமைப்பாளா்கள் கோ.சக்திவேல், க.ஸ்ரீவித்யா ஆகியோா் செய்திருந்தனா். இந்த நூலகத்தில் குழந்தைகளுக்கான பொம்மைகள், புத்தகங்கள் வாடகைக்கு வழங்கப்படும். இது, விளையாட்டு பொருள்கள் வாங்க சிரமப்படும் பெற்றோா்களுக்கு பயனுள்ளதாகவும், குழந்தைகளின் கவனம், அறிவுத் திறனை மேம்படுத்த நல்வாய்ப்பாகவும் அமையும் என்று கா.ஆதித்யநாராயணன் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com