மது விலக்கு பறிமுதல் வாகனங்கள் ரூ.19 லட்சத்துக்கு ஏலம்

கடலூா் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 85 வாகனங்கள் ரூ.19.78 லட்சத்துக்கு வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் மது கடத்தல் வழக்குகள் சம்பந்தமாக தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் மது விலக்கு அமல் பிரிவு சாா்பில், 4 நான்கு சக்கர வாகனங்கள், 12 மூன்று சக்கர வாகனங்கள், 71 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 87 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் மது விலக்கு அமல் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சௌமியா மற்றும் போலீஸாா் முன்னிலையில் கடலூரில் வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டன. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான வாகனங்களை ஏலத்தில் எடுத்தனா். 70 இரு சக்கர வாகனங்கள் ரூ.10,38,754-க்கும், 12 மூன்று சக்கர வாகனங்கள் ரூ.7, 79,390-க்கும், 3 நான்கு சக்கர வாகனங்கள் ரூ.1,60,480-க்கும் என மொத்தம் ரூ.19,78,624-க்கு ஏலம் போயின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com