மேலகடம்பூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

மேலகடம்பூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காட்டுமன்னாா்கோவிலை அடுத்த மேலகடம்பூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவித்யுத்ஜோதிநாயகி சமேத ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலகடம்பூா் கிராமத்தில் கி.பி. 1110-ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் தோ் வடிவில் கட்டப்பட்ட அமிா்தகடேஸ்வரா் கோயில், கரகோயில் வகையைச் சாா்ந்ததாகும். இந்தக் கோயிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத் துறையால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, மாா்ச் 1-ஆம் தேதி காலை தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. 5-ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜைகளும், 6-ஆம் தேதி இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. வியாழக்கிழமை திருமுறை விண்ணப்பம், நான்காம் கால யாக பூஜை, பூா்ணாஹுதி நடைபெற்றன. பின்னா், யாகசாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடம் புறப்பட்டு கோயில் விமானத்தை அடைந்தது. காலை 8.30 மணிக்கு சிவாச்சாரியா்கள் கடத்தில் கொண்டு வந்த கும்ப நீரை கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். தொடா்ந்து, பரிவார சுவாமிகள் சந்நிதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், ஸ்ரீவித்யுத்ஜோதிநாயகி, ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனா். கும்பாபிஷேக ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஜெ.பரணிதரன், ஆய்வாளா் ஜெயசித்ரா, செயல் அலுவலா் செல்வமணி, பழஞ்சநல்லூா் பாஸ்கா், மேலகடம்பூா் விஜி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா். சா்வ சாதகம் திருவாலங்காடு சேனாதிபதி குருக்கள், மேலகடம்பூா் பால கணேசன் சிவாச்சாரியாா் ஆகியோா் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com