விழாவில் பேசிய மகப்பேறு மருத்துவா் பவித்ரா பாலகிருஷ்ணன்
விழாவில் பேசிய மகப்பேறு மருத்துவா் பவித்ரா பாலகிருஷ்ணன்

அரசுப் பள்ளியில் மகளிா் தின விழா

சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் சாா்பில், மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தின் சிதம்பரம் நகரச் செயலா் ராகவேந்திரன் தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன் விழாவை தொடங்கிவைத்துப் பேசினாா். பள்ளி உதவித் தலைமை ஆசிரியை இளவரசி வரவேற்றாா். வரலாற்றுத் துறை பேராசிரியா் பாரதிதமிழ் முல்லை மகளிா் தினத்தின் நோக்கம் குறித்து பேசினாா். மகப்பேறு மருத்துவா் பவித்ரா பாலகிருஷ்ணன் மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார மேம்பாடு குறித்து எடுத்துரைத்தாா். அண்ணாமலைநகா் காவல் நிலைய ஆய்வாளா் கல்பனா, மகளிருக்கான சட்டங்கள் ஒரு பாா்வை என்ற தலைப்பில் பேசினாா். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க கடலூா் மாவட்டச் செயலா் பால்கி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க கடலூா் மாவட்டத் தலைவா் மல்லிகா, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்க மாநில துணைத் தலைவா் செந்தில்வேலன் உள்ளிட்டோா் பேசினா். நகர துணைத் தலைவா் கலியமூா்த்தி நன்றி கூறினாா். அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயதேவி, ஆசிரியைகள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com