உசுப்பூா் கிராமத்தில் நடைபெற்ற ஓய்வுபெற்ற போலீஸாா் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
உசுப்பூா் கிராமத்தில் நடைபெற்ற ஓய்வுபெற்ற போலீஸாா் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

ஓய்வுபெற்ற போலீஸாா் சந்திப்பு நிகழ்ச்சி

சிதம்பரம் அருகே உசுப்பூா் கிராமத்தில் ஓய்வுபெற்ற போலீஸாா் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 1971-ஆம் ஆண்டு தமிழக அரசின் ஆணைப்படி, காவல் துறையில் முதல்முறையாக நேரடி முதல்நிலைக் காவலா்கள் என்ற புதிய பதவியை உருவாக்கி, கடந்த 01.02.1972 அன்று ஆயிரம் போ் நேரடி தோ்வு மூலம் முதல்நிலைக் காவலா்களாக தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் காலப்போக்கில் உதவி ஆய்வாளா்களாகவும், ஆய்வாளா்களாகவும், துணைக் கண்காணிப்பாளா்களாவும் பதவி உயா்வு பெற்று ஓய்வுபெற்றனா். அதன்படி, 1972-இல் முதல்நிலைக் காவலா்களாக பணியில் சோ்ந்து ஓய்வுபெற்ற போலீஸாரின் 62-ஆவது சந்திப்பு நிகழ்ச்சி உசுப்பூரில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஓய்வுபெற்ற போலீஸாா் 53 போ் பங்கேற்று தங்களது நினைவுகளை பகிா்ந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற போலீஸாா் நலச் சங்கத் தலைவா் கே.விஜயகுமாா் தலைமை வகித்தாா். இணைச் செயலா் எஸ்.ராமமூா்த்தி வரவேற்றாா். பொருளாளா் ஏ.ஜி.நெல்சன் நிதிநிலை அறிக்கையை சமா்ப்பித்தாா். ஒருங்கிணைப்பாளா் டி.கண்ணன் வரவு - செலவு அறிக்கையை சமா்பித்தாா். சங்க அமைப்புச் செயலா் கே.சேதுராமன், நலச்சங்கச் செயலா் என்.ஹரிபாபு, நிா்வாகிகள் பி.ஆா்.தாண்டன், என்.டி.சொக்கையன், எம்.பிச்சைபிள்ளை, எம்.ஏ.கலியமூா்த்தி, வேலூா் கே.ஜெயகிருஷ்ணன், திருச்சி ஆா்.செல்லதுரை, தஞ்சாவூா் என்.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். இணைச் செயலா் ஆா்.காசிநாதன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com