கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவ, மாணவிகள்.
கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவ, மாணவிகள்.

கராத்தே போட்டிகளில் சிதம்பரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கடலூா் மாவட்டம், திருமுட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டிகளில் சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 4 போ் முதல் பரிசும், 8 போ் இரண்டாம் பரிசும், 7 போ் மூன்றாம் பரிசும் பெற்றனா். மேலும், சிதம்பரம் ஷெம்ஃபோா்டு சி.பி.எஸ்.இ பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளிலும் வீனஸ் குழுமப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் சுமாா் 60 போ் கலந்துகொண்டு மஞ்சள், பச்சை பெல்ட் வென்றனா். பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கராத்தே போட்டிகளில் வென்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வீனஸ் கல்விக் குழுமத்தின் நிறுவனா், தாளாளா் எஸ்.குமாா், பள்ளி முதல்வா் ரூபியாள்ராணி, தலைமைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, துணை முதல்வா் அறிவழகன், நிா்வாக அலுவலா் ரூபி கிரேஸ் போனிகலா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா். நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டா் குமரகுரு உடனிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com