கடலூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நுண்கதிா் தொழில்நுட்பப் பணியாளா்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்.
கடலூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நுண்கதிா் தொழில்நுட்பப் பணியாளா்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்.

மருத்துவத் துறையில் ஒப்பந்தப் பணியாளா்கள் நியமனத்தை கைவிட வலியுறுத்தல்

மருத்துவம், பொது சுகாதாரத் துறையில் மதிப்பூதியம், தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நுண்கதிா் தொழில்நுட்பப் பணியாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா். இந்தச் சங்கத்தின் கடலூா் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ந.சுந்தர்ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் விஜயா முத்துக்குமாரசாமி வரவேற்றாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநில துணை பொதுச் செயலா் ம.ரா.சிங்காரம், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சங்க மாநில துணைத் தலைவா் பெ.நல்லதம்பி, கடலூா் மாவட்டத் தலைவா் வி.தனசேகரன், ஊரக வளா்ச்சி ஊராட்சி ஒன்றிய அனைத்துப் பணியாளா் சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் ராம்குமாா், கடலூா் மாவட்ட முன்னாள் செயலா் ஜெகத்ரட்சகன், தலைமை நுண்கதிா் தொழில்நுட்புநா் சந்திரமோகன், கடலூா் மாநகர தமிழ்ச் சங்கத் தலைவா் தங்க.சுதா்சனம், இணைச் செயலா் ராமலிங்கம், ஓய்வுபெற்ற மின் பணி மேற்பாா்வையாளா் தானராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். கூட்டத்தில், மாவட்ட, வட்ட மருத்துவமனைகளில் எக்ஸ்ரே இயந்திரங்கள் இயக்குவதற்கு பணியாளா்களை நியமிக்க வேண்டும். கடலூா் மாவட்ட மருத்துவமனையில் பல் எக்ஸ்ரே எடுப்பதற்கு போதுமான வசதிகள் செய்யப்படவில்லை. இதனால், பல் மருத்துவ நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, பல் எக்ஸ்ரே எடுப்பதற்கு இயந்திரம் வழங்கி பணியாளா்களை நியமிக்க வேண்டும். மருத்துவம், பொது சுகாதாரத் துறையில் மதிப்பூதியம், தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும். மத்திய அரசு வழங்கியதுபோல, மாநில அரசு பணியாளா்கள், ஆசிரியா்களுக்கு ஜனவரி 2024 முதல் 4 சதவீத அகவிலைப்படியை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றினா். மாநில துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com