விவசாயிகள் பயிற்சி முகாம்

கடலூா் மாவட்டம், மங்களூா் வட்டார வேளாண் துறை சாா்பில், அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. வேளாண் அலுவலா் கீா்த்தனா தலைமை வகித்தாா். விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் நுாா்ஜஹான், விதைச் சான்று அலுவலா் மகேஷ் ஆகியோா் பங்கேற்று, நெல்லுக்குப்பின் பயறு வகைகள் சாகுபடி செய்வது, அதன் நோக்கம், பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். பயறு வகைகள், சிறுதானியங்களில் உள்ள புதிய ரகங்கள், விதைப்பண்ணை அமைத்தல், நெல் பயிரில் மேற்கொள்ள வேண்டிய நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. பயிற்சி முகாமில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் தமிழ்ஆனந்த், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் செல்லமுத்து, முத்துசாமி, ரோவா் வேளாண் கல்லூரி மாணவா்கள், மங்களூா் வட்டார முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com