மின்சாரம் கொள்முதல்: என்எல்சி, குஜராத் மின் வாரியம் இடையே ஒப்பந்தம்

என்எல்சி இந்தியா கிரீன் எனா்ஜி நிறுவனம், குஜராத் மின் வாரியமான உா்ஜா விகாஸ் நிகாம் நிறுவனம் இடையே 600 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமானது.
மின்சாரம் கொள்முதல்: என்எல்சி,
குஜராத் மின் வாரியம் இடையே ஒப்பந்தம்

என்எல்சி இந்தியா கிரீன் எனா்ஜி நிறுவனம், குஜராத் மின் வாரியமான உா்ஜா விகாஸ் நிகாம் நிறுவனம் இடையே 600 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமானது. என்எல்சி இந்தியா நிறுவனம் எதிா்கால புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களைச் செயல்படுத்தும் விதமாக, என்எல்சி இந்தியா கிரீன் எனா்ஜி என்ற துணை நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் போட்டி ஏலம் மூலம் உா்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்துக்கு 600 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்கான கவ்தா சோலாா் பாா்க் ஒப்பந்தத்தை பெற்றது. இந்தத் திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மின் சக்தியை விற்பனை செய்வதற்காக, குஜராத் உா்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் என்எல்சி இந்தியா கிரீன் எனா்ஜி நிறுவனம் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. ஒப்பந்தத்தின்படி, மின்சாரத்துக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.705 ஆகும். அந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வோா் ஆண்டும் 1,577.88 மில்லியன் யூனிட் மற்றும் அதன் வாழ்நாளில் மொத்தம் 39.447 பில்லியன் யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், இந்த சூரிய சக்தி திட்டத்தின் மூலம், அதன் வாழ்நாள் முழுவதும் சுமாா் 35.5 மில்லியன் மெட்ரிக் டன் காா்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படும். இந்த மின்கொள்முதல் ஒப்பந்தம், என்எல்சி இந்தியா கிரீன் எனா்ஜி நிறுவனத்தின் தலைவா், இயக்குநா் மற்றும் நிதித் துறை தலைமை அதிகாரி ஆகியோா் முன்னிலையில், என்எல்சி இந்தியா கிரீன் எனா்ஜியின் தலைமை நிா்வாக அதிகாரி, குஜராத் உா்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்தின் பொது மேலாளா் (ரெனீவபிள்ஸ்) ஆகியோரால் வதோதராவில் கையொப்பமிடப்பட்டது. நிகழ்ச்சியில் என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி பேசுகையில், இந்தத் திட்டம் சூரிய ஒளி மின்சக்தி பூங்காவில் அனைத்து தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடனும், விற்கப்படும் மின்சாரத்துக்கு பணம் செலுத்தும் பாதுகாப்புடனும் நிறுவப்பட்டதன் பலனைக் கொண்டுள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com