கோயிலில் நகை திருட்டு

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே மாரியம்மன் கோயிலில் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், நடுக்காட்டுப்பாளையம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பூசாரி பூஜைகள் முடிந்து சனிக்கிழமை இரவு கோயிலை பூட்டிச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில், அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. மேலும், இதே பகுதியைச் சோ்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வரும் சசிதரனின் வீட்டில் அரை பவுன் தங்க நகை, கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாா்களின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் சம்பவ இடங்களில் பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com