மாசி மாத அமாவாசையையொட்டி, திருக்கண்ணாடி அறையில் ஞாயிற்றுக்கிழமை அருள்பாலித்த திருவதிகை சரநாராயண பெருமாள்.
மாசி மாத அமாவாசையையொட்டி, திருக்கண்ணாடி அறையில் ஞாயிற்றுக்கிழமை அருள்பாலித்த திருவதிகை சரநாராயண பெருமாள்.

பெருமாள் கோயிலில் அமாவாசை வழிபாடு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் ஸ்ரீசரநாராயண பெருமாள் ஸ்ரீலட்சுமிநாராயணனாக (தாயாா் எம்பெருமான் மடியில் அமா்ந்த திருக்கோலத்தில்) காட்சி அளித்தாா். உத்ஸவா் ஸ்ரீசரநாராயண பெருமாள் உள்புறப்பாடு நடைபெற்ற பின்னா், திருக்கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் கலந்துகொண்டு ஸ்ரீசரநாராயண பெருமாளை தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com