அரசுப் பள்ளி ஆண்டு விழா

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூரை அடுத்துள்ள கருங்குழி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் சா.அந்தோணி ஜோசப் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் தே.சரஸ்வதி லட்சுமி, தொழிலதிபா் டி.ராஜமாரியப்பன், கடலூா் வட்டாரக் கல்வி அலுவலா் (பயிற்சி) கா.அன்புசெல்வன், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜஸ்ரீ பாக்கியராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா். அன்றைய தினம் புதிதாக 15 மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று, விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. விழாவில் 192 மாணவா்களுக்கு தொழிலதிபா் டி.ராஜமாரியப்பன் பரிசு வழங்கி வாழ்த்திப் பாராட்டினாா். ஆசிரியா்கள் சா.சாந்தி, தே.மேரி புஷ்பலதா, சி.லயோனா, வீ.கீதா மஞ்சித், அ.ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com