அரசுக் கல்லூரியில் இளையோா் நாடாளுமன்றம்

அரசுக் கல்லூரியில் இளையோா் நாடாளுமன்றம்

கடலூா் மாவட்ட நேரு இளையோா் மையம், கடலூா் பெரியாா் அரசுக் கல்லூரி நேரு இளையோா் மன்றம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான இளையோா் நாடாளுமன்றம் நிகழ்ச்சி கடலூா் பெரியாா் அரசுக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ராமகிருஷ்ணன் சாந்தி தலைமை வகித்துப் பேசினாா். நேரு இளையோா் மைய இணை இயக்குநா் டி.தெய்வசிகாமணி வரவேற்றாா். மாவட்ட சமூக நல அலுவலா் ஏ.கோமதி குத்துவிளக்கேற்றி இளையோா் நாடாளுமன்றத்தை தொடங்கிவைத்து உரை நிகழ்த்தினாா். கடலூா் சிறாா் நீதி வாரிய உறுப்பினா் எல்.துா்கா, பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினாா். கல்லூரியின் இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் ர.திலக்குமாா் ‘மை பாரத்’ இணையதள பயன்பாடுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினாா்.

தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ஜானகி.ராஜா சிறுதானியங்களின் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தாா். கடலூா் மாவட்ட சுகாதாரத் துறைக் கண்காணிப்பாளா் கே.கதிரவன் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். நிகழ்வில் நாடாளுமன்ற நடைமுறை, இந்திய ஜனநாயகம், இந்திய அரசியலமைப்பு, தோ்தல்கள் குறித்த வினாடி - வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, முதல் 3 இடங்களைப் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் தி.குமணன் வினாடி - வினா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினாா். கல்லூரியின் சமூகப் பணியியல் துறை மாணவ, மாணவிகள் நாடாளுமன்ற நிகழ்வுகளை நிகழ்த்தி காட்டினாா். முன்னதாக, இவா்களுக்கு கல்லூரியின் சமூகப் பணியியல் துறை கௌரவ விரிவுரையாளா் கோ.குமாா், நாடாளுமன்ற நிகழ்வுகளை பயிற்றுவித்தாா்.

நிகழ்வில் 800-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் கடலூா் மாவட்ட நேரு இளையோா் மையத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி, தன்னாா்வ தொண்டா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்லூரி நேரு இளையோா் மன்ற பொறுப்பாசிரியா் நா.சேதுராமன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com