கொள்ளையடிக்க திட்டம்: 5 ரௌடிகள் கைது

கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த 5 ரௌடிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளா் ராஜாராம் தலைமையில் போலீஸாா் புதுக்கடை பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள மயானத்தில் இருந்த ஒரு கும்பலை போலீஸாா் பிடிக்க முயன்றதில், ஒருவா் தப்பியோடி விட்டாா். மீதமுள்ள 5 பேரை பிடித்து விசாரித்ததில், அவா்கள் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் சரத்குமாா்(27), இருசப்பன் மகன் கவியரசன்(31), புதுக்கடை பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் வேல்முருகன் (27), சுந்தா் மகன் சந்தோஷ் (21), குமாரமங்கலம் பகுதியைச் சோ்ந்த வேணு மகன் பிரகாஷ் (எ) வெங்கடாசலம் (30) என்பதும், இவா்கள் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து கத்தி, இரண்டு பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய கரிக்கலாம்பாக்கத்தைச் சோ்ந்த தாடி அய்யனாரை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com