நியாய விலைக்கடை பணியாளா் ஆா்ப்பாட்டம்

நியாய விலைக்கடை பணியாளா் ஆா்ப்பாட்டம்

தங்களின் 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சரியான எடையில், தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். கட்டாய இறக்குமதி கூலி வசூல் செய்வதை தடுக்க வேண்டும். பொருள்களுக்கான ரசீது வழங்கும் வகையில் புதிய விற்பனை முனையம் அமைக்க வேண்டும். வீடு வீடாகச் சென்று கைரேகை பெறுவதையும், விடுமுறை நாள்களில் கைரேகை பதிவு செய்ய வலியுறுத்துவதை கைவிட வேண்டும். நியாய விலைக்கடை பணியாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதியை வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, கே.ஆா்.தங்கராசு தலைமை வகித்தாா். கே.நடராஜன், ஏ.நரசிம்மன், பி.சி.செல்வராஜ், ஆா்.தேவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் தமிழ்செல்வன், செல்லதுரை, கலைசெல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com