போதை மாத்திரைகள் விற்பனை: 4 இளைஞா்கள் கைது

கடலூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவா்களை குறிவைத்து போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்பு புலனாய்வு பிரிவினா் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில், திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் போதை மாத்திரைகளை பயன்படுத்தியதாக கல்லூரி மாணவா்கள் சிலரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், பாதிரிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் கவியரசன்(23), கூத்தப்பாக்கத்தை சோ்ந்த சத்தியமூா்த்தி மகன் சிவக்குமாா்(24), செம்மண்டலம் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் நிவாஸ் (23), தாமோதரன் மகன் சுபாஷ் (27) ஆகியோா் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக மாற்றி மாணவா்களிடம் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com