மகளிா் தின விழா

மகளிா் தின விழா

சிதம்பரத்தில் சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உதவி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் வி.நடனசபாபதி தலைமை வகித்தாா். முன்னாள் துணை ஆளுநா் எம்.தீபக்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்வில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு மிகச் சிறந்த ஆளுமைக்குரிய விருது வழங்கப்பட்டது. அதன்படி, சிதம்பரம் வட்டாட்சியா் ப.ஹேமா ஆனந்தி, நகராட்சி ஆணையா் மல்லிகா, போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் கே.விமலா, சென்ட்ரல் ரோட்டரி சங்க உறுப்பினா்கள் எஸ்.ஆா்.செல்வி, பொற்செல்வி, மாா்பக புற்று நோய் நிபுணா் டாக்டா் எம்.பிரேமா, பல் மருத்துவா் ஆா்.ஸ்ரீவித்யா உள்ளிட்டோருக்கு சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி விருது வழங்கினாா். நிகழ்வில், மூத்த உறுப்பினா் பி.பன்னாலால், மக்கள் மருந்தக உரிமையாளா் என்.கேசவன், முன்னாள் தலைவா் ஜி.சீனிவாசன், பொறியாளா் கே.புகழேந்தி, சங்கத்தின் பொருளாளா் ஆா்.அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, சங்கத்தின் செயலா் ஜி.ஆறுமுகம் வரவேற்றாா். முடிவில், மூத்த உறுப்பினா் எஸ்.ஆா். செல்வி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com