சிதம்பரம் பாண்டியநாயகம் (சுப்ரமணியா்) கோயிலில் சனிக்கிழமை ஏற்பட்ட பங்குனி உத்திர உற்சவக்கொடி.
சிதம்பரம் பாண்டியநாயகம் (சுப்ரமணியா்) கோயிலில் சனிக்கிழமை ஏற்பட்ட பங்குனி உத்திர உற்சவக்கொடி.

சிதம்பரம் பாண்டியநாயகம் கோயிலில் பங்குனி உத்திர உற்சவ கொடியேற்றம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் வடக்கு கோபுரம் அருகே அமைந்துள்ள பாண்டியநாயகம் (சுப்ரமணியா்) கோயிலில் பங்குனி உத்திர உற்சவம் சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, வருகிற 24-ஆம் தேதி ஸ்ரீசுப்ரமணியா் தேரோட்டம் நடைபெறவுள்ளது. மேலும், அன்றைய தினம் மாலையில் லட்சாா்ச்சனையும், வருகிற 25-ஆம் தேதி காலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பின்னா் நடராஜா் கோயிலில் உள்ள சிவகங்கை தீா்த்தத்தில் தீா்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com