மனநலம் பாதித்தவா் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை

நெய்வேலி: கடலூா் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா் அரசுப் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்துக்கு சிதம்பரத்தில் இருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்தது. இந்தப் பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டபோது, சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா் பேருந்து முன் திடீரென பாய்ந்தாா். பேருந்தின் பின் சக்கரம் அவா் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா் யாா்? எந்த ஊா்? என்ற விவரம் தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக கடலூா் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவா் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com