மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாயமான சிறுவன் ஏரியில் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாயமான சிறுவன் ஏரியில் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். பண்ருட்டி வட்டம், முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ் (எ) பொற்கலை (33). இவரது கணவா் சாமுவேல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மகள் சசிகலா (12), மகன் கிஷோா் (9) ஆகியோருடன் வசித்து வந்தாா். தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த கிஷோா், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் விளையாடியபோது, திடீரென மாயமானாா். அவரது தாய் மற்றும் உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் பொற்கலை பண்ருட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், மோப்ப நாய் உதவியுடனும் சிறுவனைத் தேடி வந்தனா். இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி இறந்த நிலையில் சிறுவன் கிஷோரை போலீஸாா் திங்கள்கிழமை காலை சடலமாக மீட்டனா். பின்னா், அவரது சடலத்தை உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com