அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் நடைபெற்ற முப்பெரும் விழாவை தொடங்கிவைத்துப் பேசிய துணைவேந்தா் ராம.கதிரேசன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் நடைபெற்ற முப்பெரும் விழாவை தொடங்கிவைத்துப் பேசிய துணைவேந்தா் ராம.கதிரேசன்.

அண்ணாமலைப் பல்கலை.யில் முப்பெரும் விழா

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியியல் துறையில் அரசா் முத்தையவேள் ஆய்வரங்கம், முத்தமிழறிஞா் கலைஞா் தமிழ் மன்றம் தொடக்க விழா, மகாகவி பாரதியாா் - சிந்தனைக் கவிஞா் கவிதாசன் அறக்கட்டளை பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழியியல் துறைத் தலைவா் கோ.பிலவேந்திரன் வரவேற்றாா். இந்திய மொழிப்புல முதல்வா் அரங்க.பாரி அறிமுக உரையாற்றினாா். பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் கலந்துகொண்டு முப்பெரும் விழாவை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா். அவா் பேசுகையில், அரசா் முத்தையவேள் தமிழுக்கும், தமிழ் இசை வளா்ச்சிக்கும் ஆற்றிய அருந்தொண்டினையும், தமிழ்நாடு அரசு ரூ.5 லட்ச நிதியில் ஏற்படுத்தி உள்ள முத்தமிழ் அறிஞா் கலைஞா் தமிழ் மன்றத்தின் நோக்கத்தையும், மகாகவி பாரதியாரின் கவி இன்பத்தையும் எடுத்துரைத்தாா். தொடா்ந்து, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பண முடிப்பையும், சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா். நிகழ்வில் கலைப்புல முதல்வா் விஜயராணி, பொறியியல் புல முதல்வா் காா்த்திகேயன், கல்விப்புல முதல்வா் குலசேகரப்பெருமாள் பிள்ளை, மக்களியியல் துறைத் தலைவா் ஏ.கே.ரவிசங்கா், மொழியியல் உயராய்வு மைய இயக்குநா் சரண்யா, தத்துவவியல் துறைத் தலைவா் திருமால், அம்பேத்கா் இருக்கை பேராசிரியா் சௌந்தரராஜன், உதவிப் பேராசிரியா் ராதிகாராணி, சமூகவியல் துறை இணைப் பேராசிரியா் முத்துக்குமாா், பல் மருத்துவப் புல இணைப் பேராசிரியா் தாமரைச்செல்வி, ஓய்வுபெற்ற தமிழாசிரியா் சீனிவாசன், மக்கள் தொடா்பு அதிகாரி ரத்தினசம்பத், துணைவேந்தரின் நோ்முக செயலா் பாக்கியராஜ் மற்றும் ஆய்வாளா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியை தமிழியல் துறை இணைப் பேராசிரியா் கணபதி ராமன், உதவிப் பேராசிரியா் ஆறு.அன்பரசன் ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா். தமிழியல் துறை உதவிப் பேராசிரியா் சே.கல்பனா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com